தெய்வங்கள்

தெய்வங்கள்

விதவையாக்கியது யார்? வேதனை வேதனை சுமப்பது நான்?







காலமும் பார்த்து நேரமும் பார்த்து
கல்யாணம் கடமையாக பண்ணி வச்சாங்க
கட்டமெல்லாம்   பொருத்தம் பார்த்து-கண்ணியமாய்
கடவுளிடம்  சொல்லிதானே சேர்த்து வச்சாங்க

பெற்றவரும் மற்றவரும் பொருத்தம் பேசி
சுற்றமும் நட்பும்  சொந்தமும் சூழதானே
நற்றமிழ் நல்லோரும் நம்மூர் கடவுளின்-முன்னிபாக
பற்றினேன் பரவசமானேன் பக்தியால் உருகினேன்

இத்தனையும்  செய்ததால் இனிமேல் பயமில்லை
இன்பத்துக்கு  எல்லையில்லை  யாருக்கும் பயமில்லை
பார்க்கும் போதெல்லாம்  படுத்தேன்  இணைந்தேன்-ஆனந்தமாய்
பக்கமிருப்பான்  பிள்ளைகள் பிறந்ததும் என்றிந்தேன்

பிறந்த வீட்டில் பிள்ளைகளுடன் இருந்தபோது
இருந்த இடம் விபச்சாரியிடம் விருந்தானான்
வருந்தினான்  வாங்கி கொண்ட நோயினால்-மருந்தால்
திருந்துவான் என நினைத்து தேடினேன் நிம்மதியை

எதையும் சொல்லவில்லை யாரிடமும் பேசவில்லை
மனதை கல்லாக்கி  மாயந்துவிட்டான் தூக்கில்
மறுநிமிட செய்தியில் நான் மாயந்துவிட்டேன்-மனதால்
மணவாழ்வில் சாய்ந்துபோனேன் சறுகானேன்

குற்றம் செய்தது நானா அல்லது
கும்பிடும் தெய்வம் குற்றவாளி தானா
நம்பிய பெற்றோரா நண்பர்களா- நரகமாய்
நாள் நட்சத்திரம் நல்லோர் வாழ்தியதாலா

தெரியவில்லை புரியவில்லை திசைஎனக்கு
தெரியாத இளம்தளிர்கள் அறியவில்லை
புரியவில்லை போகும் நாட்கள்  விளங்கவில்லை-விதவை
பெயரெனக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் கலங்கவில்லை

எனக்கும் வேண்டும் எதிரே வருவோரின்
ஏகாந்த பார்வையும்  மனதில் தாக்கமும்
தூக்கமில்லா நாட்களின் துயரமும் எனக்கு-வாழ்வில்
ஏக்கமும் உள்ளது என்பதை உணர்ந்தானா

படைத்ததும் பள்ளியில் படிக்க வைத்ததும்
கிடைத்த மாப்பிள்ளை வசதியை பார்த்ததும்
கிரகபலன் நாள் நட்சத்திரம் கேட்டதும்- சாதனை
நரகத்தில் எனக்கேன்  இந்த   வேதனை

நல்ல பிள்ளைகள் இருந்தும் என்னபயன்
செல்லமாய் சிணுங்கி அள்ளி விளையாட
அவனில்லை ஆனாலும் ஆறுதலாய் இருப்பது-மனதில்
அவனை பழிவாங்க தேறுதலோடு வாழ்வேன் !!



Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more