தெய்வங்கள்

தெய்வங்கள்

என் தங்கை

  தங்கை
                ***
என்னை துணைக்கு
எப்போதும் சார்ந்திருப்பாள்

எப்போதும் என்னுடனே
கை கோர்த்து நடந்திடுவாள்

தப்பே செய்தாலும்
அப்பாவிடம் சொல்ல மாட்டாள்

தனியாக என்னைவிட்டு
கரிசோறும் தின்ன மாட்டாள்

சிக்கல் கழித்துவிட்டு
 தலை சீவி மகிழ்ந்திடுவாள்

எப்போதும் என்னுடனே
எதிர்வாதம் செய்திடுவாள்

அப்பாவித்தனமாய் அழுதிடுவாள்
அண்ணனை காணவில்லையென

சின்ன காயம் பட்டாலும் எனக்கு
சிரித்துக்கொண்டேகேவி கேவி அழுதிடுவாள்

இப்போதும்  இருக்கிறாள்
எரிந்து எரிந்து விழுகிறாள்

பெற்ற பிள்ளைகளையும்
பிணமாகி பொங்கல் என்கிறாள்  கோவத்தில்

ஆனாலும் என்னை பார்த்தவுடன்
அடங்க மறுத்து அழுகிறாள்

தேனாக இருந்த நாட்கள்
திரவமாகி விஷமாகி போனாலும்

தெரியலையே  அவளை மறக்க
தெரிகின்ற உயிர்போகும் நாள்வரை

ஊனாகிவிட்டேன் ஊமையாகிவிட்டேன்
கானது அவள் துயரை கண்டவுடன்

தொடரும் துயரத்தை
தொலைக்க முடியுமா?

மறுபடியும் அண்னாக பிறக்க முடியுமா?
பிறந்தாலும் அன்றுபோல் இருக்க முடியுமா?


இராம.கண்னதாசன்
சென்னை

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more