தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிமையான வாழ்வுக்கு தேவை



இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால்
இனிமையான பிள்ளைப்பேறு சீக்கிரமே கிடைத்திட
துணையோடு மனம் மகிழ்ந்து துள்ளலுடன்-அன்போடு
இணைந்து அளவோடு பேசி வாழுங்கள்

இன்பத்தைத் தேடி இணையாக ஒன்றிணைந்து
சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி
திங்களாய் சேர்ந்த திரவியத்தைமுத்ததாக
ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைத்தது

அன்று முதல் குடத்துள் கருவாக்கி
ஐந்தாவது வாரத்தில் அழகான உருவாக்கி
பிஞ்சு விரலும் அவயங்களும் பேழைக்குள்-உருவாகி
நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளர்ந்து

கொஞ்சும் குரலையும் குடும்ப உறவையும்
மஞ்சமென போற்றி மாணிக்கமாய் ஜொலிக்க
பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை
பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே

Comments

  1. அழகு.....
    மலடிக்கும் குழந்தை பிறந்திடும் கவிதையினை படித்தால்

    ReplyDelete
    Replies
    1. வருகைத்தந்தமைக்கு நன்றி,அடிக்கடி வாருங்கள் அகவுரைத்தாருங்கள்

      Delete
  2. துணையோடு மனம் மகிழ்ந்து துள்ளலுடன்-அன்போடு
    இணைந்து அளவோடு பேசி வாழுங்கள்//

    மனம் கவர்ந்த வரிகள்
    அந்தச் சூழலைத்தான் வேலைப் பளுவும்
    டி.வி யும் பிடித்துக் கொண்டு வாழ்வை
    நரகமாக்கிக் கொண்டிருக்கிறதே
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதற்காகத்தான் இந்த அறிவுரை ,இளைய சமுகத்ததிற்க்கு
      தேவை

      Delete
  3. சந்தமும் பாட்டும் போல அருமையா சொன்னீங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நட்பே வருக வந்து ஆதரவு தருக

      Delete
  4. கருவில் உருவான (க)விதை

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா,வருகைக்கு நன்றி

      Delete
  5. இனிமையான வாழ்வுக்கு கண்டிப்பாக எல்லாமே தேவைதான், அழகா கவிதை மூலம் சொல்லிருக்கிங்க. அருமை...

    ReplyDelete
  6. இல்லறம் என்ற நல்லறத்தை இனிமையாக வாழ கவிதை படைத்துள்ளமைக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more