தெய்வங்கள்

தெய்வங்கள்

அவளுக்கு அப்படியொரு ஆசை

......... அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது .

            அதிகாலை வேளையில் கடற்கரை அருகில் அமைதியான சூழலில் காலாற நடக்க வேண்டுமென்று...

          அப்போது அவன் கேட்டான் ,ஆமா  என்னஇங்கு எதுக்கு அடிக்கடி வரீங்க?

           அதையேன் இப்போ கேட்கிறீங்க? அவள் சொன்னாள் .

          உடனே சுதாரித்தவளாய் அங்கே பாருங்க மீன்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் துள்ளி விளையாடுகிறது

         அந்த அதிகாலையிலும் நிலவும் சந்தோசமாய் வெளிச்சத்தை கடலில் வீச
இனிமையான கடல் காற்றும்  மட்டுமே அவளுக்கு சந்தோசமாய்
இருந்தது.அவளுக்கு அப்படியொரு ஆசை

          நான்  கேட்டேனே பதில் சொல்லவில்லையே?

         உங்க பேரு என்ன எந்த ஊரு?

சற்றே நிதானமாய் அவனை உற்று நோக்கினாள் ஏன்?

    இல்ல தெரிஞ்சுக்கலாமே என்றுதான்,தினமும் அந்த முதியோர் இல்லம்
வரீங்க அங்குள்ளவங்களிடம் ஆதரவா பேசுறீங்க அதனால்

அதனால் ?

நான் என் ஆத்ம திருப்திக்கு மட்டுமல்ல அங்கு எனக்கு
வேண்டியவங்க இருக்காங்க அதுக்குதான் நான் வருகிறேன்

      ஆனால் அவள் உண்மையை மறைக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும்.

         எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒருவரும் எனக்கில்லை
நான் நிம்மதி தேடியே இங்கு வருகிறேன் மனம் விட்டு பேசுகிறேன் அவர்களது ஏக்கத்தையும் அன்பாகப் கேட்கிறேன் இங்குள்ளவர்களிடம் அன்பு செலுத்த ஆளில்லை என்னைப்போல

            அப்படியா?

            எனக்கும் ஆதரவாய் இருக்கிறது என்னிடம் அன்பாய் பேச என்னை எதிர்பார்க்கும் நல்ல உள்ளங்களுக்காக பணத்தை கொடுக்க பலர் இருக்கிறார்கள் அன்பை தேடி நான் வருகிறேன்

       நானும் உங்களைப்போலவே அன்பு அமைதி ஆதரவு வேண்டியே வருகிறேன் ! அவன் சொன்னான்
     
       பணமும் மனமும் உள்ள  மனிதர்களும் இருக்கிறார்கள் என்று!
என்னக்கு பணம்! அவனுக்கு அன்பு! முதியோருக்கு ஆதரவு !


Comments

  1. முதியோருக்கு ஆதரவு ! அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆதரவற்ற அனைவருக்கும் அன்பு வேண்டும்.நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  2. பணமும் மனமும் உள்ள மனிதர்களும் இருக்கிறார்கள் என்று!
    என்னக்கு பணம்! அவனுக்கு அன்பு! முதியோருக்கு ஆதரவு !

    கனிவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா ,அன்பு ஆதரவு இல்லாத பணம் என்ன செய்ய முடியும்.நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  3. Replies
    1. ஆதரவின்றி தவிப்பவர்க்கு ஆதரவாய் இருக்க வேண்டும்.
      நன்றி நண்பரே நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  4. சகோதரரே! இந்த உலகில் நாம் எதை வேண்டுமென்றாலும் சம்பாதித்துவிடலாம். ஆனால் தூய அன்பையும் இந்த ஆதரவையும்... :(
    இப்பொழுதிருந்தே நாமெல்லாம் இறைவனிடம் வரமாக வேறு எதைக் கேட்காவிட்டாலும் இந்த இரண்டையும் வரமாக கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்...

    நல்ல சிந்தனை. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோதரி,என்னதான் அதிகம் சம்பாதித்தாலும் நாமும் அன்புக்காக எங்க வேண்டிய காலம் வரத்தான் போகிறோம் என்பதும் உண்மையே

      Delete
  5. கண்டிப்பாக கவிஞரே பணம் கொடுக்கக் கூட ஆட்களை தேடி விடலாம் ... அன்பும், ஆதரவும் யார் தருவர்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மையே நேர்மையான அன்பு கிடைப்பதில் தேடவேண்டிதான் உள்ளது.

      Delete
  6. நிஜம்தான் நான் நேரில் உணந்திருக்கிறேன். என் தோழிகளுடன் இது போன்று சென்று மகிழ்வித்தது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அன்பை தேடி அனைவரும் செல்கின்றனர்.ஆனால் உண்மையான அன்பும் ஆனந்தமும் பெற்றவர்களிடத்தில் உள்ளதை மறந்து விடுகின்றனர்

      Delete
  7. அன்பையும் ஆதரவையும்விட வேறு என்ன கொடை இருக்கப்போகின்றது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,அன்பும் ஆதரவும் வேண்டுமெனில் பெற்றோரை உபசரித்தாலே கிடைக்கும்

      Delete
  8. பணத்தைத் தருவதற்குக் கூட அன்பு வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா உள்ளன்பு வேண்டும்

      Delete
  9. அன்பு ஆதரவு சிறந்த கொடை.
    இது இல்லாததாலே தானே உலகில் பல குறை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. உண்மைதான் ,இன்று தேவைபடுவது ஆறுதல் .ஆறுதல் இருந்தால் எல்லாமே தானாக வந்திடும்

    ReplyDelete
  11. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் .
    பணத்தை விட அன்பும் ஆதரவும் பெரிதென்று.
    நன்றி பகிர்விற்கு,

    ReplyDelete
    Replies
    1. உண்மையை சொல்லப்போனால் உறவுகள் எல்லோருக்கும் இழப்புதானே.

      Delete
  12. பிரச்சாரம் போலல்லாது
    கதையாக அழகாகச்
    சொல்லியிருக்கறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. சார்.உங்களது ஆதரவு என்னை மகிழ்ச்சிக்கு ஆளாக்குது.நன்றி

      Delete
  13. அன்பு....
    பணம்....
    ஆதரவு...

    அது அது வயதுக்குத் தகுந்தவாறு
    வந்து சேர்ந்துவிட்டால்
    வாழ்க்கை இன்பம் தான்.

    பகிர்வு அருமை கவியாழி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா,உண்மைமைதான் தேவைதான்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more