தெய்வங்கள்

தெய்வங்கள்

தமிழைப் போற்றியேப் பதிவிடுவோம்

நன்றி சொல்லா நட்பிணையே
நாங்கள் வளர்க்க விரும்புகிறோம்
நல்லவர் கெட்டவர் வெறுப்பின்றி
நண்பராய் நினைத்தே பழகுகிறோம்

வல்லவர் வறியவர் சொல்லாமல்
வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம்
இல்லையே என்பதைஉணர்த்தாமல்
இருப்பதைப் பகிர்ந்தே புசித்திடுவோம்

முதியவர் இளையவர் பகிர்வின்றி
முறையே நட்பாய் மதித்திடுவோம்
ஆடவர் பெண்டீர் அனைவருமே
அன்பாய் மதித்தே நடந்திடுவோம்

நல்லவவை கெட்டவை நடப்பதையே
நாலே வரிகளில் எழுதிடுவோம்
நன்மையும் தீமையும் நோக்காமல்
நலமே போற்றியே பதிவிடுவோம்

 இன்னல் துயரம் நடப்புகளை
இணைய வலையில் பகிர்ந்திடுவோம்
எல்லா ஊரிலும் எம்தமிழை
இணையம் கொண்டே வளர்த்திடுவோம்

சாதி மதங்களை மறந்திடுவோம்
சமத்துவம் நன்றே போற்றிடுவோம்
ஊரும் பேரும் தெரியாமல்
உணர்வால் தமிழனய் அறிந்திடுவோம்

இல்லம் இனமே பாராமல்
இணைய வழியே பேசிடுவோம்
வல்லமைத் தந்த தமிழுக்கு
வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்

Comments

  1. ஒவ்வொன்றையும் அருமையாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உண்மையைச் சொன்னேன் உள்ளதை உணர்ந்தேன் .வருகைக்கு நன்றிங்க தனபாலன்

      Delete
  2. நன்று... நல்ல கவிதை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தம்பி.தொடர்ந்து வாங்க இன்பமும் தாங்க

      Delete
  3. ஒவ்வொன்றும் அருமை, தமிழை தமிழ் எழுதி நாளும் வளர்த்திடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் விருப்பமான ஆராய்ச்சியும் கூட நாமும் தமிழில் செய்வோம்.

      Delete
  4. தமிழுக்கு வாழ்த்துச் சொல்லுதல்
    தாய்க்குச் சொல்லுதல் போலத்தானே
    நம் வாழ்வும் வளமும் தமிழைச் சார்ந்து தானே
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தமிழும் தாயும் ஒன்றுதான் சார்.சரியாச் சொன்னீங்க.தமிழை தாயை மறந்த உறவுண்டோ.வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  5. சிறப்பான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க உங்களின் நானும் நண்பனாக திருச்சி வருவேன்

      Delete
  6. சிந்தனைக்கு விருந்தாய் சிறந்த கவிதந்தீரே
    வந்தனை செய்தும்மை வாழ்த்துகிறேன் நன்றியுடன்!...

    த ம.5

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  7. ''..வல்லமைத் தந்த தமிழுக்கு

    வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்...''
    ஆம் தமிழைப் போற்றி வளர்ப்போம்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  8. மிழனென்றெமக்கு அடையாளம் தந்தவளாம்
    தமிழன்னையின் தாள் பணிந்தே வாழ்த்திடுவோம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி டினேஷ் சுந்தர்

      Delete
  9. மன்னிக்கவும் மிழன் அன்று தமிழன்

    ReplyDelete
  10. தமிழின் பெருமை சொல்லி செல்கிறது கவிதை

    ReplyDelete
    Replies
    1. முதியவர் இளையவர் பகிர்வின்றி
      முறையே நட்பாய் மதித்திடுவோம்//
      நட்பையும் சேர்த்துதானே சொல்லியுள்ளேன்
      வருகைக்கு நன்றி

      Delete
  11. மிக மிக அருமை, சொல்லியக் கருவும் சொல்லிய விதமும் அருமை. :)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகையும் எனக்குப் பெருமை.தொடர்ந்து வாங்க

      Delete

  12. திக்கெட்டும் பரவட்டும் தமிழின் பெருமை!!

    ReplyDelete
    Replies
    1. இனி மேலும் தொடரட்டும் உங்களின் கருத்து.தொடர்ந்து வாங்க

      Delete
  13. அழகான சிந்தனைக் கவிதை... எங்கும் தமிழ் பரவட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தொடர்ந்து வாங்க

      Delete
  14. உணர்வால் தமிழனை அறிந்திடுவோம்
    அருமையாகச் சொன்னீர் அய்யா நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆம் நாம் எல்லோருமே உணர்ந்து வாழ்ந்தால் நன்மைதானே.

      Delete
  15. Replies
    1. வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றிங்க கருண்

      Delete
  16. அருமையான கருத்துக்களைக் கொண்ட அழகான கவிதை சார்...

    ReplyDelete
  17. ஊரும் பேரும் தெரியாமல்
    உணர்வால் தமிழனாய் இணைய
    வல்லமைத் தந்த தமிழுக்கு வாழ்த்து!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more