ஆழாக்கு சாம்பல் மட்டுமே....
பணத்தை சேர்க்கும் பயனையும் பசியில் சேர்த்துப் பாருங்கள் பகிர்ந்தே உணவைப் போடுங்கள் பயனோர் மகிழ்வய் காணுங்கள் இந்தப் பிறவியில் வாழ்வதையே இனிமை யாக்கி உணருங்கள் இறுதி நாட்களில் மகிழுங்கள் இன்பம் மனதில் சேருங்கள் மகிழ்வாய் வாழப் பழகுங்கள் மனதை போற்றி உணருங்கள் மக்கள் துயரைத் போக்கியே மானிடம் புகழ வாழுங்கள் இனிமேல் புதிதாய் விதிசெய்வீர் இனிமை பணத்தில் இல்லாமல் தலைமேல் பணத்தை சுமக்காமல் தவிர்ப்பீர் விட்டுச் செல்வதையே ஆழாக்கு சாம்பல் மட்டுமே அறிந்தோர் கையில் கிடைக்குமே அதற்காய் பணமேன் சேர்க்கணும் அதையும் தவிர்த்தும் சாகனும்