தெய்வங்கள்

தெய்வங்கள்

கண்ணன் வருவானா?முத்தம் தருவானா?





(நன்றி கூகிள்)


வெண்ணையைத் திருடிய கண்ணன்
வேதமும் சொல்லிடும் மன்னன்
ராதையை துரத்தியே மகிழ்ந்தான்
ரசித்தவர் விருப்பமும் அதுதான்
இன்றும் தொடரும் கனவுகள்
இதுபோல் இருப்பதும் தவறா

கண்ணனின் லீலைகள் கண்டதால்
காண்பவர் உள்ளமும் மகிழ்ந்ததால்
திண்ணையில் கதைகளை மறந்து
திரையில் காணும் நிகழ்வை
இன்னமும் ஏங்கும் பெண்டீர்
இருப்பதும் இல்லைத் தவறாய்

பூவையே கேளடி உண்மையை
பூவினுள் வண்டென புகுந்தே
புதுக்கதை என்னிடம்  கேட்டே
பொழுதும் தொடர்வதும் ஏனோ
பேதையே  தெரிந்தால்  சொல்லடி
போதையே எனக்கு குறையலை

ஏனடி நில்லடி பாரடியே
ஏக்கமும் அவனென கூறடியே
பாவையர் ஏக்கமும் தணிக்க
பாவலன் அவனென சொல்லடியே
தாகமும் தணிந்திட தீர்ந்திடவே
தலைவனும் அவனென எண்ணடியே

மேனியில் வண்டெனப் புகுந்தே
மீட்டிடும் ராகங்கள் இனிதே
தேடியே தொடருதே மீண்டும்
திருடியே சென்றவன் கண்ணன்
வாடிய என்முகம்  பார்க்க
வருவானா? மீண்டும் தருவானா?





Comments

  1. நீண்ட நாட்களாய் எனக்கு இருந்த ஒரு குறை நீங்கி விட்டது. "கண்ண"தாசன் ஆகிய நீங்கள் கண்ணனைப் பற்றிய கவிதை படிக்கவில்லையே என்று.. (இல்லை நான் இன்னும் படிக்கவில்லையே) என்ற என் ஏக்கம் இன்று தீர்ந்தது..

    ReplyDelete
    Replies
    1. வயசுபையனுக்கும் ஏக்கம் தீர்ந்ததா? மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. கண்ணன் பிறந்த நாளுக்கு கண்ணன் கவிதை .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //கண்ணனின் லீலைகள் கண்டதால்
    காண்பவர் உள்ளமும் மகிழ்ந்ததால்//

    ஐயா, தங்களது லீலைகள் கண்டதால் எங்கள் உள்ளமும் மகிழ்கிறது.... காலத்திற்கேற்ற கவிதை.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா உன்னுடைய புண்ணியத்துல என்உள்ளமும் மகிழ்ந்தது

      Delete
  4. கண்ணன் வருவான்
    அருமையான கவிதை ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிங்கயா

      Delete
  5. நீங்கள் இப்படிப்பட்ட [ஆ]ஏக்கங்களை தொடரவேண்டுமென்று ஏங்குகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. உங்களது ஏக்கமும் தூக்கமும் தொடர மருத்துவரைப் பாருங்கள் நண்பரே

      Delete
  6. கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!

    ReplyDelete
  7. கண்ணத\தாசனின் கிருஷ்ண கானம் கேட்பதற்கு இனிமை. கவியாழியின் கண்ணன் பாட்டு படிப்பதற்கு அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டு கேட்பதற்கோ மிகவும் இனிமை

      Delete
  8. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கயா

      Delete
  9. கோபியர் கண்ணனைக் கண்டு மயங்கினர்.
    கண்ணா கண்ணா என்று உண்ணாமல் உறங்காமல்
    அவனே எல்லாம் என்று ஏங்கினர் .
    உலகத்தே உள்ள ஆன்மாக்கள் எல்லாமே
    பரம்பொருளை நினைத்து உருகுவதே கண்ணனின் கதை

    அந்த கண்ணனை நினைந்து நினைந்து உருகி உருகி
    எழுதாத கவிஞர் இல்லை.

    அந்த லிஸ்டில் கண்ணதாசன் இணைந்தது இயற்கையே.

    SUBBU THATHA.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சுப்பு தாத்தாவின் வருகையும் எனக்குப் பெருமையே

      Delete
  10. கண்ணனின் பிறப்பே அன்பினை அகிலமெங்கும் ஊட்டி
    அன்பினால் வாழ்வில் நற்கதி பெறுவதற்கே!...

    அன்பினால் அனைவரும் ஒன்றாவோம்! அகிலத்தையே வெல்வோம்!

    நல்ல கவிதை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கு யாம் எப்போதும் அடிமையே சகோ

      Delete
  11. கண்டிப்பாக கண்ணன் வருவான்!..எல்லாருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் தங்களின் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  12. //மேனியில் வண்டெனப் புகுந்தே
    மீட்டிடும் ராகங்கள் இனிதே// இனிது தான் அய்யா. தங்களது கவிதையும் அதனைத் தானே செய்து கொண்டிருக்கிறது. கவிதை வரிகள் அருமை அய்யா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பாண்டியன்.தொடர்ந்து வாங்க

      Delete
  13. உங்களது இந்த கவிதையில் முதல் வரியின் முதல் எழுத்திலேயே அடுத்த வரியும் ஆரம்பிப்பது சிறப்பாக இருந்தது, கண்ணன் பிறந்த இந்த தினத்தில் அருமையான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி ! உங்களை பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலோடு இருக்கிறேன் !

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more