தெய்வங்கள்

தெய்வங்கள்

அவரவர் வாழ்கையை வாழுங்கள்

அம்மா வாழ்ந்த காலத்திலும்
அடிமை யாக இருந்ததில்லை
அப்பா தாத்தா பாட்டியிடம்
அன்பாய் இருக்கத் தவற வில்லை

எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து
எந்த முடிவும் செய்திடுவார்
இல்லா நிலையிலும்  உள்ளதையே
இனிமை யாகச் சொல்லிடுவார்

வசதி யான வாழ்க்கைக்கு  
வெளியில் வேலைக்குச் சென்றதில்லை
வருவோர் போவோர் நண்பரிடம்
வீட்டுச் சண்டையைச் சொன்னதில்லை

இப்போ நிலைமை மாறியது
இனிமை வாழ்வும் மறைந்ததுவே..
தப்பாய் எண்ணும் பழக்கத்தால்
தனியாய்ச் செல்லும் நிலையானது

பிரிந்தே வாழ்ந்து வந்தாலும்
பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும்
இருந்தும் சண்டை வருகிறதே
இல்லற வாழ்வும் கசக்கிறதே

அமைதி யான  வாழ்க்கைக்கு
அன்பாய்ப் பரிவாய்ப் பேசுங்கள்
அடுத்தவர் பேச்சைக் கேட்காமல்
அவரவர் வாழ்க்கையை வாழுங்கள்


Comments

  1. அமைதி யான வாழ்க்கைக்கு
    அன்பாய்ப் பரிவாய்ப் பேசுங்கள்
    அடுத்தவர் பேச்சைக் கேட்காமல்
    அவரவர் வாழ்க்கையை வாழுங்கள்

    அருமையான கவிதை..!

    ReplyDelete
  2. அருமை... அன்பே அனைத்திற்கும் மருந்து...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. அவரவர் வாழ்க்கையை வாழுங்கள்! அருமையான தத்துவம்! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  4. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்