தெய்வங்கள்

தெய்வங்கள்

எனது 25 வது திருமண நாள் 10.03.2015

கடந்த வருடங்களில் கண்ட மகிழ்ச்சி
களிப்பூட்டிய நாட்கள் கணக்கி லடங்கா
கடனாகக் கிடைத்த கனிவான சொந்தங்கள்
கண்டதும் இன்பங் கொண்ட நட்புகள்

தொடந்த துன்பங்கள் தொலைத்த இன்பங்கள்
துரத்தி வந்தாலும் தாங்கினேன் நேசித்தேன்
அடர்ந்த மனதிலே அன்றாடம் பூசித்தேன்
அம்மா அப்பாவை அளவின்றி யாசித்தேன்

வெறுப்பேற்றி சென்ற  வீதிவழி உறவுகள்
வீணாய் சண்டையிட்ட வீண்பேச்சுக் காரர்கள்
பொறுப்பின்றி உறவாடி போய்விட்ட நண்பர்கள்
போதையைத் தூண்டிய பேதைகள் இருந்தும்

பணம்காசு சேர்க்காமல் பல்லிளித்துச் செல்லாமல்
பதவியிலே தன்மானம் பறந்தெங்கும் போகாமல்
குணம்மாறி சிறிதேனும் குற்றங்கள் செய்யாமல்
குடும்ப உறவாக குறைவின்றி காத்திட்டேன்

உறவுகள் என்னிடம் உதவி கேட்டால்
உடனே செய்வேன் உறவையும் காத்தேன்
பிரிவுகள் ஏற்பட பிணையின்றி செய்ததே
பின்னாளில் தெரிந்தேன் பிரிவையும் தாங்கினேன்

நட்புக்கு நான்தந்த நாட்களோ குறைவில்லை
நாள்தோறும் மறக்காமல் நன்றியுடன் தானிருந்தேன்
உட்பக்க இதயத்தில் ஓரிடத்தில் வைத்தும்
உளமார தொடந்தும் ஒதுங்கிச் சென்றார்

இக்கால வாழ்கையில் இடையூறு வந்தாலும்
இனிமேலே துன்பங்கள் தொடர்ந்து வராமல்
சிக்கலைத் தீர்த்து சிரித்து வாழவே
சிறப்பான வாழ்த்துக்கள் சொல்ல வருவீரோ




(கவியாழி)







Comments

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன்

      Delete
  2. இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  3. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன்

      Delete
  4. Indru pol endrum mana makizhvutan nooraandu vaazhveeraaka.
    Subbu thatha

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன்

      Delete
  5. என்றும் இளமையுடன் வாழ்ந்து
    தமிழ்மணம் பரப்ப
    இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன்

      Delete
  6. இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    உளம் கனிந்த வாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன்

      Delete
  8. தங்களை வாழ்த்த வயதில்லை கவிஞரே பிராத்திக்கின்றேன் .... நலமே விளைக...
    தமிழ் மணம் 8

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன்

      Delete
  9. மணநாள் வாழ்த்துகளும் வணக்கங்களும் ஐயா

    ReplyDelete

  10. வணக்கம்!

    இருபத் தைந்தாம் ஆண்டேந்தி
       இல்லம் இனிக்க வாழ்த்துகிறேன்!
    அரும்முத் தாகக் கவிதைகளை
       அளிக்க வேண்டி வாழ்த்துகிறேன்!
    பெருஞ்சொத் துனக்கு வலையுலகம்
       பெரியோர் சொற்கள் உன்காவல்!
    வரும்..புத் தமுதாய் இனி..நாள்கள்!
       வாழ்க! வாழ்க! பல்லாண்டு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றியென வணங்குகிறேன் கைகூப்பி
      வாழும்வரை நன்றி சொல்வேன்

      Delete
  11. வாழ்த்துகள்..இந்த நல்ல நாளில் கவியாழி மீண்டும் கிளர்ந்தெழுந்து வர விரும்புகிறேன் :)
    த ம 10

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வருகிறேன் ஆறுதல் பெறுகிறேன் நண்பரே

      Delete
  12. இருபத்தைந்தாவது மணநாளில் இதயம் நிறைந்த வாழ்த்துகள் கவிஞரே! -(இதிலாவது, உங்கள் சீனியராக இருப்பதற்காக மகிழ்கிறேன். என் மூத்த மகளுக்கு வயது 34.எப்புடீ?)

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்பவுமே எதிலுமே மூத்தவர்தான்.வாழ்த்துக்கு நன்றி

      Delete
  13. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  14. கால் நூற்றாண்டு கால மண வாழ்வு என்பதானது மனதிற்கு நிறைவு தரும் ஒன்றாகும். தாங்கள் எல்லா நலனும் பெற்று நீடுழி வாழவும், தொடர்ந்து எழுதவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அய்யா

      Delete
  15. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அய்யா

      Delete
  16. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
    த.ம.12

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அய்யா

      Delete
  17. மனமார்ந்த வாழ்த்துக்கள்! நண்பரே! எப்படியோ விடுபட்டு விட்டது! தாமதமாக வந்து வாழ்த்துச் சொன்னதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  18. வாழ்த்த மனமுள்ள தங்களின் வாழ்த்து தாமதமாய் கிடைத்தாலும் தன்னிகரில்லா தங்கமே

    ReplyDelete
  19. Konjam late dhan.. irundhalum.. Happy married life !!!!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்