Posts

Showing posts with the label /சமூகம்/கேள்வி

தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்

கெடுத்து  வாழ்வதால் கிடைக்காது நட்பு கொடுத்து வாழ்வதால் குறையாது அன்பு                ***** உழைப்பவன் வாழ்வு ஊமையாகி விடாது உழைக்காமல்  என்றும் உயர்ந்துவிட முடியாது                ***** நேர்மையாய் வாழ்பவன் நிம்மதியாய் தூங்குவான் நெறிகெட்டு வாழ்பவன் நீண்ட நேரம் தேடுவான்                 ***** ஏழைக்கு கிடைக்கும் எப்போதும் நிம்மதி என்றெண்ணி வாழ்வதாலே ஏற்றமில்லை சந்ததி                ****** கூட்டுக் குடும்பம் குலம் சிறக்க வாழும் கூடாவிட்டால் ஒற்றுமை நெறிகெட்டுப் போகும்              ***** கற்றக் கல்வி கடைசிவரைக் காக்கும் கற்காவிட்டால் அதுவே காலங்காலமாய் ஏக்கம்              ****** (கவியாழி)

பாவி என்றால் யார்?

           பொதுவாக வழக்கத்தில் எல்லோருமே சொல்லக்கூடிய இந்த வார்த்தை ஆச்சர்யமாக வழக்கத்தில் சொல்வது.இதன் உண்மையான முழுப்பொருளும் தெரியுமா? பெரும்பாலும் எல்லோராலும் இவ்வார்த்தை தவிர்க்க முடியாத வார்த்தையாகி விட்டது.            அடப்பாவமே ,அடப்பாவி ,அடிப்பாவியே  என்று யாரையெல்லாம் அழைக்கிறோம் ஏன்? அவ்வாறு அழைக்கிறோம்  பாவி என்றால் என்ன பொருள்? என்ன அர்த்தம் ?. அடப்பாவமே என்றால் வருத்தப் படுவதாகவும், அடப்பாவி என்று கொடுஞ்சொல்லால்  திட்டுவதுபோலவும் அடிப்பாவியே எனும்போது மட்டும் தவறு செய்ததாக சொல்லுவதாயும் அழைப்பதேன் ?         பாவி,படுபாவி ,கொடும்பாவி என்று திட்டுவதற்கும் சொல்வழக்கம் உண்டு .ஏன் இங்கு திட்டுவதற்கு பாவி,படுபாவி,கொடும்பாவி என்று சொல்லுகிறோம் இதெல்லாம் எனக்கு விளங்கவில்லை  ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனி அர்த்தங்கள் இருந்தாலும் எல்லா வார்த்தைகளும் தவறான அர்த்தத்தை கொடுப்பதேன்.         தெரிந்தால் சொல்லுங்கள் அல்லது எனக்கு தெரிந்தப் பின்னர் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

ரசித்தவர்கள்