Posts

Showing posts with the label கவிதை/ வேதனை/ ஏக்கம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

வேண்டும்நீ எனக்கு வேண்டும்....

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும் ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா அவரின் இணைக்கு நிகருண்டா பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும் உற்றவர் அன்புக்கு விலையுண்டா கற்றவருமே கண் கலங்குவார் கல்லாதவரோ மனம் புழுங்குவார் சொத்தும் சொந்தமு மெனனக்கு சொல்லென்னா துயரம் தருமே சுகமும் பணமும் வேண்டாமே சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே வாழ்ந்த நாட்களை எண்ணியே வாழ்வு முழுதும் நானிருப்பேன் வாடிபோடி என்றழைத்தே நீயும் வசைபாட வேண்டும் அன்பாக மீண்டும் எழுந்து வருவாய் மேனியில் எழுந்திடு உணர்வாய் தாங்கியே அருகில் உன்னைத் தாய்போல் காப்பேன் அன்பாய் வேண்டும்நீ எனக்கு வேண்டும் மீண்டும் துணைக்குநீ வேண்டும் தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும் தைரியம் சொல்லநீ வேண்டும்

ஒத்தைப் பிள்ளை வேண்டாமே

ஒத்தைப் பிள்ளை போதுமின்னு ஒய்யாரம் செய்யும் நண்பா சத்தியமா தப்பு தான்னு இப்போதே சொல்லி விட்டேன் சொத்து பத்து இல்லாட்டி சொந்தம் மட்டும் இருந்தாலே பத்துத் துயர் போக்கிடவே பக்கத் துணை இருப்பாரே மிச்சம்மீதி அன்பை எங்கே மீண்டும் தேடித் போவதெங்கே சொத்தப் புள்ளை ஒத்தையாக சோகமாக இருக்கு நண்பா உத்தரவும் போட வில்லை உருப்படியா சொல்ல வில்லை ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி ஓய்வே இல்லாமப் போச்சி சத்தியமா சொல்லி விட்டேன் ஒத்தப் புள்ள வேண்டாங்க மிச்ச உயிரும் போகுமுன்னே சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க

தனிமையின் தவிப்பு

தனிமை ஏக்கம் நோயாமே-அதைத் தவிப்பவர் சொன்னால்  நியாயமே இளமை முதுமை இரண்டிலும்-இப்படி இனிமை மறுக்க  வேண்டாமே இணையை இழந்த காரணத்தால் இன்றும் மறக்க முடியலையே இதுவும் வாழ்வா என்றெண்ணி-என் இதயம் நொறுங்கிப் போகிறதே துணையாய் வீட்டில் இருந்தாலும் துன்பம்  மறந்து வாழ்ந்தாலும் கனிவாய் போற்றி  வந்தாலும்-அது தனியாய் மகிழ்வாய் இருக்காதே கையில் ரூபாய் கோடி  இருந்தாலும் கவலை இன்றி வாழ்த்தாலும் பொய்யைச் சொல்லி மகிழ்ச்சியாய்-தனிமை பொம்மை வாழ்க்கை இதுதானே பணியில் இருந்த நண்பனெல்லாம் துணையும் சேர்ந்து வாழ்வதால் இணையாய் இருந்த காலத்தை-எண்ணி இன்றும் அவர்போல்  இருக்கத் தோணுதே தனிமைத் தவிப்பை  தவிர்த்திட லாமா இனியும் அதுபோல் இருக்க வேண்டுமா பணமோ மனமோ மாற்றுமோ-அன்பை பகிர்ந்து என்னுடன் வருவார் யாரோ துணையை மறக்க துயரைப் போக்க பிணையாய் யாரும் வருவாரோ பேதைமை இன்றி இருப்பாரோ-மகிழ்ச்சி பொங்க அன்பை மீண்டும் தருவாரோ

ரசித்தவர்கள்