Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ வேதனை

தெய்வங்கள்

தெய்வங்கள்

கூட்டங் கூடிக் குடிப்பது

நாளும் கிழமையில் நட்புக்காய் நல்லோர் சிலரின் முன்னிலையில் நற்சுவைக் கலந்தே குடித்தனர் நாகரீகமாய் அங்கேயே மகிழ்ந்தனர் ஆளும் வர்க்க அரசனுடன் அடித்தட்டு மக்களும் கூட்டமாய் அன்றும் சேர்ந்தே சுவைத்தனர் அப்போதே கலைந்து சென்றனர் இன்று எல்லாமே மாறியது எல்லோரும் சேர்ந்து ஆடுவது கல்லாதோர் இல்லாதோர் கூடிக் களியாட்டம் எங்கும் போடுவது எல்லா மக்களுமே சீரழிய எங்கும் கடைகள் திறப்பது கோயில் பள்ளி  அருகிலும் கூட்டம் கூடிக் குடிப்பது இதிலே சமத்துவம் இருப்பதாய் இணைந்தே மகிழ்ந்து குடிப்பனர் இளையவர் முதியவர் மறந்தே இனிமை வேண்டி துடிப்பனர் தினமும் தொடர்ந்தே குடியை  தைரியம் கொண்டே குடித்ததால் தலைக்குப் போதை ஏறவே தரையில் வீழ்ந்தே கிடந்தனர் பணமும் புகழும் அழியவே பாடாய்படுத்தும் இக்குடியை மனமே  திருந்தி நிறுத்தினால் மகிழ்வதும் உந்தன் குடும்பமன்றோ

சின்னஞ் சிறு விதைகள்-5

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால் பணமும் என்னிடம் தங்குவதில்லை தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும் தவறாக யாரிடமும் பழகுவதில்லை தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே தோழனின் நட்பை கண்டதில்லை விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை விரைந்தும் அணைத்த தில்லை துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய் துணிந்து நெருங்கி வந்ததுண்டு வேதனையால் வீறி அழுததுண்டு-எதிரி வீசும் பார்வையைக் கண்டு நன்றி மறந்து வாழவில்லை-அதையும் நானும் மறுத்துப் பேசவில்லை கொள்கை மறந்து நினைவில்லை-என்றும் கோழையாக நானும் விரும்பவில்லை இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே இணைத்து வந்ததை மறக்கவில்லை

விதியை மாற்றும் சாலைவிதி

தலைகவசம் அணியாதோர் தாங்கலாய் தேடிக்கொள்ளும் தலைவிதியே மரணம்              ----------- சாலைவிதியை மதிக்காமல் செல்லுகின்ற அன்பர்களே ஓலையின்றி  தேடிவரும் உத்தரவு மரணமே                 -------- விதிமறந்து  வேகமாய் வீதியில் சென்றால் மதிமயங்கும் இறுதியில் மரணமே கொடுக்கும்               --------- துர்மரணத்தை தேடியே தூங்கிக் கொண்டே தூரமாய் வேகமாய் வாகனம் செல்லும்             ----------- வீட்டிற்கு செல்லவே வாகனம் வேண்டும் விதிமாறி சுடுகாட்டிற்கு ஓட்டிச் செல்லாதே               ----------- குடும்பத்தை நினைத்து வாகனம் செலுத்து கூடிய மட்டும் வேகத்தைக் குறைத்து                --------- போதையில் வாகனம் போய்சேரும் இடமோ மருத்துவ மனை வளாகம்              ----------- விதியை வெல்ல வேகமாய் ஓட்டும் புரியாத நிமிடத்தில் பேராபத்து காத்திருக்கும்                ------------ இருசக்கர வாகனத்தை முறுக்கினால் இன்பமாம் இடையில் சறுக்கினால் இறுதியில் துன்பமாம்             ------------ விதியை மாற்றும் வேதனையை சேர்க்கும் மதிமயங்கி வேகமாய் மரணத்தை தழுவும்            ======

பட்டிணத்தான் வாழ்க்கை

பட்டினத்தில் வாழ்வதாய் சொல்கிறேன்  பார்ப்பவர் சிலரை  நலமா என்கிறேன் திட்டமாய் கடந்தே   வருகிறேன்-இங்கு  தினமும் இயந்திரமாய் கடக்கிறேன் எப்போதும் ஊமையாக  செல்கிறேன் எப்படியும் வாழ்ந்திடஎண்ணுகிறேன் எங்கேயும் தனியாகப் போகிறேன் எத்தனையோ மனிதர்களை பார்க்கிறேன் கற்பனையாய் கடமைக்காய் வாழ்கிறேன் காசுபணம் உள்ளவர்போல் நடிக்கிறேன் இத்தனையும் எதற்காய் என்றெண்ணினால் அத்தனையும் அடுத்தவர்க்கான கற்பனையே  அடுத்த வீட்டில் இருப்பவர் அறியேன் அவர்தம் உறவை ஏதென்று தெரியேன் தடுத்திடும் உறவே தடையாய் காரணம் தடுப்பதை மறுக்க தவறுதல் முறையா இருக்கிற காலம் இப்போதும் இறுதிவரை இப்படித்தான் வாழ்கிறோமே பட்டணத்தில் குறுகிய நட்பும் குடும்ப வட்டத்திலும் குறையாய் சொல்லாமல் வாழ்கிறோமே உணர்வினால் இந்தியனாய் தமிழனாய் உரக்கச் சொல்லி சிரிக்க இயலுமா கலகம் செய்யும் சாதி மதம்-பட்டணத்திலும் கடந்தே வாழ நம்மால்  முடியுமா

பெத்தவங்களை போற்றுங்க

கற்றதனால் மறக்குமோ பெற்றோரின் கடமைகள் காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு கடையிலும் கிடைக்குமோ கனிவுடனே பேர்சொல்ல கண்குளிரப் பார்த்திருக்க மீண்டும் வந்து பிறப்பாரா மகிழ்ச்சியோடு அழைப்பாரா மற்றவரும் நினைப்பாரோ மகிழ்ச்சியாக சிரிப்பாரோ உற்றாரும் வாருவாரோ உடனிருந்து பார்ப்பாரா கருவுற்ற நாள்முதல் கண்ணுறக்கம் பாராமல் உருவாக்கி வளர்த்தாரே உதிரத்தை உணவாக்கி பெத்தவங்களை போற்றினாலே பேரிண்ப தடையேது  மகிழ்ச்சி பெற்றதனால் பிள்ளைகளின் பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு

புறப்படு தமிழா ! புறப்படு !!

Image
புறப்படு புறப்படு புயலென விரைந்திடு புதைந்தவர் கனவினை புரிந்திட்டுப் புறப்படு வதைபடு உதைபடு வாழ்பவர் துயர்நீக்க வந்திடும் சிரமங்கள் வென்றிடப் புறப்படு எழுந்திடும் உணர்வுகள் இணைந்திடப் புறப்படு எம்மினம் என்றே உணர்வுடன் புறப்படு மாணவர் உணர்ச்சியை மழுக்கிட முடியாது மக்களின் உணர்ச்சியை மறுத்திடக் கூடாது மாணவர் கிளர்ச்சியே மனதுக்கு மகிழ்ச்சியே மாண்டிட்ட மக்களின் மறுபடி எழுச்சியே

துரோகியே மடிவாய் நீயே

அழுகின்ற குரலென்றும் அடங்காமல் போகாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய்  மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால்-உணர்வை வீழ்த்திவிட முடியாது கடுமையான வார்த்தையாலே நெடுந்துயரம் தீராது கயவனாகி போனதனால்-உனக்கு கண்ணுறக்கம் இனியேது காற்றடிக்கும் திசையெங்கும் கண்டபடிச் செய்திட்ட கற்பனைகெட்டாத காரியத்தால் தூற்றித் துறத்தும் காலம் தூரமில்லை நேற்றுவரைச் செய்ததை நினைத்துப் பார்த்து தோற்றுவித்த துரோகத்தை ஏற்றுக்கொண்டு மடிவாய்  நீயே கவியாழி.

நேர்மையே நிம்மதி

நேர்மையாய் வாழ்வதனால் நிம்மதியேக் கெட்டிடாது நெறிகெட்டு வாழ்வதாலே நெடுந்துயரம் தவிர்த்திடாது பாடுபட்டுச் சேர்த்தப் பொருள் பயனின்றி வீண்ப்போகாது பழிசொல்லால் உண்மை பயங்கொண்டு ஓளிந்திடாது கடின உழைப்புக்குப் பலன் கண்டிப்பாய் மறைந்திடாது கஷ்டப்பட்டு சேர்த்தப் பணம் கடைசிவரைத் தீர்ந்திடாது குறுக்கு வழியில் நடத்தும் குடும்ப வாழ்க்கை இனித்திடாது கூ  ட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை கடைசிவரைக் கைவிடாது

கோழையாக சாகிறான்.

பணம் உள்ளவன் பதுக்கி வாழுறான் பாசத்தை மறந்து பணத்தையே காக்கிறான் குணம் உள்ளவன் கொடுக்க நினைத்தும்-இல்லாமல் குடும்ப நலனை மட்டும் பார்க்கிறான் கள்ள வழியில் காசுப் பார்கிறான் கண்டபடி செலவும் செய்யுறான் உள்ளபடி சொல்ல போனால் -நேர்மையற்ற ஊழியத்தை  தொழிலாகச் செய்யுறான்   நல்லவரைக் கண்டு நையாண்டி செய்யுறான் நாலுகாசு பாதுகாக்க நாயைபோலக் காக்கிறான் இல்லாததை  ஏளனமாய் சொல்லுறான்-இறுதியில் இல்லாமை அறிந்து சொன்னார்கள் என்கிறான் சொந்தமும் பந்தம்மும்  சுற்றம் மறந்து சொத்து நிறைய  சேர்த்து வைக்கிறான்  எந்த உணவும் தின்ன முடியாது-நோய் வந்ததாலே மாத்திரை மட்டுமே  திங்குறான் சின்னப் புத்தியால் செய்வதை மறக்கிறான் சிறந்தோரை  இழந்து   சாபத்தையும் சேர்கிறான் உள்ளபடிச் சொல்லப்போனால் உறக்கமின்றி-கோழையாக ஊர்வாயை உலைவாயை கொண்டே சாகிறான்

பருவமறியா பாலகன்.பாலச்சந்திரன்

Image
  பருவமறியா பாலகனை கொன்ற இருள் மனது கொலைகாரன் மடிவானா மக்களை இழப்பானா-வீட்டில் இடிவிழுந்து இலங்கையில் இறப்பானா குடிகெட்டு மதியிழந்து திரிவானா குடும்பமே பைத்தியமாய் அலைவாரோ இடுகாட்டில் தலை புதைத்து-தவறால் சுடும் தீயில் விழுந்து மடிவானா பிணம் தின்னும் குணம் மாறி  மனம் திருந்தி வருந்து வானா மக்களை பார்த்து மண்டியிட்டுக்-கதறி மற்ற நாளையும் சிறையில் கழிப்பானா ஈர நெஞ்சமுள்லோர்அவன் கோர முகத்தை கிழித்து  தீரத்தீர அடித்து துரத்தி-கோழையின் குடும்பமே அழியாதோ மடியாதோ

ரசித்தவர்கள்