Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ஏக்கம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......

உலகம் முழுவதும் அங்கங்கே உரிமைப் பிரச்சனை வருகிறதே உயிர்கள் பலவும் மடிகிறதே உயர்வும் அதனால்  தடுக்கிறதே கலகம் கலவரம் திருட்டுகளும் கயவர் கூட்டக் கொள்ளைகளும் கடிந்தே தினமும் நடக்கிறதே கவலை மனதில் தருகிறதே விலையும் தினமும் ஏறுவதால் விஞ்சிக் கவலைத் தருகிறதே பொன்னும் பொருளும் இல்லாமல் புலம்பும் நிலையே வருகிறதே திண்ணைப் பேச்சு இப்பொழுதே தினமும் வீணாய் போகிறதே பண்ணை எங்கும் காணாமல் பரந்த வெளியாய் இருக்கிறதே கவலை இல்லா வாழ்க்கைதனை கடக்கும் நிலையும் திரும்புமோ நிலைமை எப்போ மாறுமோ நிம்மதி மீண்டும் திரும்புமோ சண்டை என்றும் இல்லாமல் சமத்துவம் எங்கும் விரும்பினால் அனைத்துமே நிலைமை மாறிடும் அகிலமே அன்பால் செழித்திடும்

உலகமே உறவாகிவிட்டது

உலகமே உறவாகி விட்டது உரிமையுள்ள துணையாகி விட்டது வலைப்பக்கம் தினம் வராவிட்டால் வருத்தமாகி மனம் தவிக்கின்றது இளமைக்கும் முதுமைக்கும் இதுவே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது எண்ணங்களைப்  பகிர முடிகிறது எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சரிசமாய் பேசத் துடிக்கின்றது புதுஉலகம் புதுஉறவை பார்க்க புத்தகமாய் நினைவைக் கோர்க்க எத்தனையோ தூரத்துக்கும் செல்கிறது எழுத்துலகே என்னையும் ஈர்க்கின்றது இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை இப்போதும் இனிமையாக எழுத முடிகின்றது

போரின்றி ஈழம் கிடைக்காதோ

ஒற்றுமையாய் தமிழர்கள் இருப்பாரோ ஓரணியில் சேர்ந்து உழைப்பாரோ போரின்றி ஈழம் கிடைக்காதோ-ஐநா புகுந்து வாக்கெடுப்பு நிகழ்த்தாதோ பார்போற்ற மகிழ்ச்சித் திரும்பாதோ பைந்தமிழன் வாழ்வும் சிறக்காதோ பூவுலகில் தமிழன் புகழ் இருக்க-புதிய விஞ்ஞான நிகழ்வும் நடக்காதோ விஜய வருடத்தில் விடிவும் விடுதலைக்கான தூய தெளிவும் வீதியெல்லாம் கோலம் போட்டு-தமிழன் வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்காதோ அயல்நாட்டில் வாழும் அனைவரும் அப்பா அம்மா கூட்டுக்குடும்பமாய் எப்போ ஒன்றாய் மகிழ்ந்து-இன்பம் தப்பா வாழ்வு மீண்டும் கிடைக்குமா சிண்டு சிறுசும் ஓடியாடி விளையாடி கெண்டு கிழங்கள் பேசி மகிழ்ந்து திண்டு திண்ணை சுற்றம் கூடி-இன்பம் கண்டு மகிழும் நாளும் வாராதோ

ஆனந்த வாழ்வு....

மேகமெல்லாம்  ஒன்று சேராதோ மோதிக்கொண்டு மழையும் தராதோ தாகமெ ல்லோர்க்கும் தனியாதோ-தமிழ் தரணியெல்லாம் முழுதுமாய் நனையாதோ விவசாயம் மீண்டும் நன்கு பெருகாதோ விளைச்சலுக்கு நல்ல விலை அடங்காதோ உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காதோ  -அதனால் உழவனுக்கு  மீண்டும்  வாழ்வு ஒளிராதோ பாடுபட்டுச் சேர்த்தப் பணம் பன்மடங்காய் மீண்டும் உயராதோ பணிசெய்வோர் கடன் சுமையும்-சிறிதும் பனியாக உருகிக் குறையாதோ தேகமெல்லாம் சேர்ந்த நோய்கள் தீர தெளிவான மருந்தொன்று படைக்காதோ தேடித்தேடி நல்லுணவை ருசித்து-இன்பமாய் தினமெல்லோரும் புசித்து மகிழ்வாரே கடனில்லா இல்வாழ்க்கை அமையாதோ கஷ்டமெல்லாம் நிம்மதியாய்  தீராதோ அளவான குடும்பங்கள் மகிழ்ச்சியாய் ஆனந்த வாழ்வு மீண்டும் கிடைத்திட்டால் கனவில்லா நெடுந்தூக்கம் வந்திடுமே-மகிழ்ச்சி கடலெனவே நல்வாழ்க்கை அமைந்திடுமே தினந்தோறும் மகிழ்ச்சி கிடைத்திடுமே-மக்கள் தீராத நோயெல்லாம் விரைவில் தீர்ந்திடுமே

ரசித்தவர்கள்