Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/நன்றி

தெய்வங்கள்

தெய்வங்கள்

என் அப்பாவுக்கு நன்றி சொல்வேன்..

எப்போதும் எந்நாளும் குடும்பமே என்றிருந்த என் அப்பாவுக்கு இப்போது நன்றி சொல்வேன் இதற்காகத் தலை குனிவேன் மழலையிலே மடியில் கிடத்தி மாறாத அன்பு கொண்டு பணிவிடைகள் பலதும் செய்து பாங்குற வளர்த்தத் தந்தையே தப்பேதும் நான் செய்தால் தவறையே சுட்டிக் காட்டி முப்போதும் அறிவுரைச் சொல்லி முறையாக என்னை வளர்த்தாய் தேவையறிந்து தேடித் தந்தாய் தெவிட்டாத இன்பம் தந்தாய் பூவையிணை மணம் முடித்து புதிய வாழ்கையும்  அமைத்தாய் பொருள் சேர்க்கும் வழிமுறையும் பெரியோரின் மன நோக்கம் புரியும்படி சொல்லி வளர்த்தாய் புனிதனாய் என்னை பார்த்தாய் நாள்முழுதும்  உழைத்தாய் நான் வளரப் பாடுபட்டு நல்வாழ்வை எனக்கு தந்த தோள் கொடுத்த தெய்வமே வணங்குவேன் உன்னை எப்போதும் வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன் கனமும் உன்னை மறவேன் கடமையும் உம்போலச் செய்வேன்

கவிஞர்களை நானும் போற்றுவேன்

அடுத்தப் புத்தகம் வெளியிட ஆர்வமாய் நானும் உள்ளேன் படித்துப் பார்த்து எனக்கு-சான்றாய் பதிலளித்த வலை நண்பர்களே கொடுத்த ஆதரவுக்குப் பதிலாக கோடி என்னிடம் பணமில்லை பிடித்துப் போன காரணத்தால்-தமிழ் பிறந்த மொழி தெரிந்ததனால் சிறகடித்துப் பறக்கக் கருத்தை சீக்கிரமே தாருங்கள் அடுத்ததாய் சிலந்தி போலப் பிண்ணி-சிறிதே சிற்றெறும்பு போலச் சேர்த்தே பதிவுலகில் நானும் பதிவராக பத்திரிக்கைப் பேசும் மனிதராக பைந்தமிழ் மக்களில் ஒருவராக பணிவுடன் படைக்க விரும்புகிறேன் கற்றறிந்த கவிதை நண்பர்களே கவிதையில் கண்ட சொற்பபிழையை சொல்லுங்கள் மீண்டும் மாற்றுவேன் சொல்வோரை நானும் போற்றுவேன்

வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா

குருவை மிஞ்சினால் கோபப்பட்டு  விடுவாரா கோபத்தில் என்மேல்-செல்லமாய் சேற்றை பூசி விடுவாரா இன்னும் கொஞ்சம் முன்னேற இனிய வார்த்தைச் சொல்வாரா இப்படியே இருக்கட்டுமென ஓட்டுப்போட மறுப்பாரா கூட்டத்தில் என்பேரை கூப்பிட்டு அழைப்பாரா கோடிபுண்ணியம் கிடைத்திடவே கொஞ்சி என்னை அணைப்பாரா வீட்டுக்கு என்னையழைத்து விருந்தும் கூடத் தருவாரா வீறுகொண்டு சென்றிடவே வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா ஒன்றுமே புரியவில்லை ஊமையாய் நிற்கின்றேன் நன்றே தெரிந்த நான்கு -வார்த்தை இன்றே உரைப்பீரே நல்லோரே

ரசித்தவர்கள்