Posts

Showing posts with the label சமூகம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்பமான வாழ்க்கைக்கு...

    கடந்த வாரம்  எனது நண்பர்வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.அதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து  எனது இருசக்கர வாகனத்தில காலையிலேயே ரயில் நிலையம் சென்றேன் .அந்த பொழுதே மிகவும் ரம்மியமாக இருந்தது அதுவும் சொந்த ஊருக்குப் போவதற்கு கசக்கவா செய்யும்.       விடிந்தும் வெளிச்சம் தர மறுத்த சூரியன்,அதிகாலை தென்றல் காற்று ஆஹா எத்தனை சுகம் எனக்கு மெதுவாக அந்த காற்றை சுவாசித்தபபடியே சென்றேன்.நேரமாவதுகூட தெரியாமல் மெதுவாக காற்றின் ரிதம் கலையக்கூடாதென  சென்றது மனதுக்கு இதமாய் இருந்தது.       எத்தனைமுறை சொந்த ஊர் சென்றாலும் எங்கிருந்தோ இனம் புரியாத ஆனந்தம் எப்படி வருகிறது  புரியவில்லை. சொந்த ஊரில் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பழகிய நாட்கள் இடங்கள் எல்லாம் பறந்துவந்து கதைச் சொல்வது எல்லாமே மகிழ்ச்சியாய் உள்ளதேன்.       அன்றும் அப்படித்தான் அசைபோட்டுச் செல்லும்போது அருகிலேயே அவருக்கு - 75அந்தம்மாவுக்கு -70  எடை 50  கிலோவுக்கு குறைவாகவும் ஒல்லியான தேகத்தோடும்  இருந்தார்கள் .மனமொத்த தம்பதிகள் இருவரும் மனமகிழ்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவ

காதலி ! காதலா ! காதல்!

Image
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை உணர்வுள்ள காதல் தோற்றதில்லை மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல் மறந்து போனதாய் சரித்திரமில்லை மனம் பார்த்து வருவதே காதல் மிகையான பணம் பார்த்த தல்ல குணம் மாற்றியும் வரலாம்-காதல் கொள்கை உறுதி யோடும் வரலாம் அவசர காதல் அழிந்ததுண்டு அவசிய காதல் முறிந்ததுண்டு ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல் ரசனை மட்டுமே தகுதியில்லை மனதை மாற்ற போராடு மகிழ்ச்சியோடு அதை நீ நாடு புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய் புகழ்ந்து வாழ்த்தி  நீ சொல்லு பிரியும் காதல் தொடர்ந்ததில்லை பிரிக்கின்ற காதல் அழிவதில்லை புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை

"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா

Image
"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தக வெளியீட்டு விழா  படங்கள் திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன் திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு  வழங்கப்படுகிறது  திரு.திருமாவளவன்  அவர்களால் "அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தகம் வெளியிடப்பட்டு  புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார். இவ்விழாவிற்கு   குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, கவியாழி.கண்ணதாசன்

ரசித்தவர்கள்