Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

தனிமையின் தவிப்பு

தனிமை ஏக்கம் நோயாமே-அதைத் தவிப்பவர் சொன்னால்  நியாயமே இளமை முதுமை இரண்டிலும்-இப்படி இனிமை மறுக்க  வேண்டாமே இணையை இழந்த காரணத்தால் இன்றும் மறக்க முடியலையே இதுவும் வாழ்வா என்றெண்ணி-என் இதயம் நொறுங்கிப் போகிறதே துணையாய் வீட்டில் இருந்தாலும் துன்பம்  மறந்து வாழ்ந்தாலும் கனிவாய் போற்றி  வந்தாலும்-அது தனியாய் மகிழ்வாய் இருக்காதே கையில் ரூபாய் கோடி  இருந்தாலும் கவலை இன்றி வாழ்த்தாலும் பொய்யைச் சொல்லி மகிழ்ச்சியாய்-தனிமை பொம்மை வாழ்க்கை இதுதானே பணியில் இருந்த நண்பனெல்லாம் துணையும் சேர்ந்து வாழ்வதால் இணையாய் இருந்த காலத்தை-எண்ணி இன்றும் அவர்போல்  இருக்கத் தோணுதே தனிமைத் தவிப்பை  தவிர்த்திட லாமா இனியும் அதுபோல் இருக்க வேண்டுமா பணமோ மனமோ மாற்றுமோ-அன்பை பகிர்ந்து என்னுடன் வருவார் யாரோ துணையை மறக்க துயரைப் போக்க பிணையாய் யாரும் வருவாரோ பேதைமை இன்றி இருப்பாரோ-மகிழ்ச்சி பொங்க அன்பை மீண்டும் தருவாரோ

வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா

குருவை மிஞ்சினால் கோபப்பட்டு  விடுவாரா கோபத்தில் என்மேல்-செல்லமாய் சேற்றை பூசி விடுவாரா இன்னும் கொஞ்சம் முன்னேற இனிய வார்த்தைச் சொல்வாரா இப்படியே இருக்கட்டுமென ஓட்டுப்போட மறுப்பாரா கூட்டத்தில் என்பேரை கூப்பிட்டு அழைப்பாரா கோடிபுண்ணியம் கிடைத்திடவே கொஞ்சி என்னை அணைப்பாரா வீட்டுக்கு என்னையழைத்து விருந்தும் கூடத் தருவாரா வீறுகொண்டு சென்றிடவே வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா ஒன்றுமே புரியவில்லை ஊமையாய் நிற்கின்றேன் நன்றே தெரிந்த நான்கு -வார்த்தை இன்றே உரைப்பீரே நல்லோரே

சின்னஞ் சிறு விதைகள்

கெடுத்து  வாழ்வதால் கிடைக்காது நட்பு கொடுத்து வாழ்வதால் குறையாது அன்பு                ***** உழைப்பவன் வாழ்வு ஊமையாகி விடாது உழைக்காமல்  என்றும் உயர்ந்துவிட முடியாது                ***** நேர்மையாய் வாழ்பவன் நிம்மதியாய் தூங்குவான் நெறிகெட்டு வாழ்பவன் நீண்ட நேரம் தேடுவான்                 ***** ஏழைக்கு கிடைக்கும் எப்போதும் நிம்மதி என்றெண்ணி வாழ்வதாலே ஏற்றமில்லை சந்ததி                ****** கூட்டுக் குடும்பம் குலம் சிறக்க வாழும் கூடாவிட்டால் ஒற்றுமை நெறிகெட்டுப் போகும்              ***** கற்றக் கல்வி கடைசிவரைக் காக்கும் கற்காவிட்டால் அதுவே காலங்காலமாய் ஏக்கம்              ****** (கவியாழி)

பட்டிணத்தான் வாழ்க்கை

பட்டினத்தில் வாழ்வதாய் சொல்கிறேன்  பார்ப்பவர் சிலரை  நலமா என்கிறேன் திட்டமாய் கடந்தே   வருகிறேன்-இங்கு  தினமும் இயந்திரமாய் கடக்கிறேன் எப்போதும் ஊமையாக  செல்கிறேன் எப்படியும் வாழ்ந்திடஎண்ணுகிறேன் எங்கேயும் தனியாகப் போகிறேன் எத்தனையோ மனிதர்களை பார்க்கிறேன் கற்பனையாய் கடமைக்காய் வாழ்கிறேன் காசுபணம் உள்ளவர்போல் நடிக்கிறேன் இத்தனையும் எதற்காய் என்றெண்ணினால் அத்தனையும் அடுத்தவர்க்கான கற்பனையே  அடுத்த வீட்டில் இருப்பவர் அறியேன் அவர்தம் உறவை ஏதென்று தெரியேன் தடுத்திடும் உறவே தடையாய் காரணம் தடுப்பதை மறுக்க தவறுதல் முறையா இருக்கிற காலம் இப்போதும் இறுதிவரை இப்படித்தான் வாழ்கிறோமே பட்டணத்தில் குறுகிய நட்பும் குடும்ப வட்டத்திலும் குறையாய் சொல்லாமல் வாழ்கிறோமே உணர்வினால் இந்தியனாய் தமிழனாய் உரக்கச் சொல்லி சிரிக்க இயலுமா கலகம் செய்யும் சாதி மதம்-பட்டணத்திலும் கடந்தே வாழ நம்மால்  முடியுமா

நேசமுள்ள நட்பு

சொந்தமாய் உறவாய் சொல்லமுடியா உணர்வாய் நெஞ்சமே மகிழ்வாய் நேசமுடன் இருப்பார் காசுபணம் தேவையில்லை கற்பனையாய் வருவதில்லை நேசமுள்ள நட்புக்கு-எப்போதும் நேரம் காலம் போதவில்லை ஆணோ பெண்ணோ அன்புக்கு விலையேது அடுத்தவரை நம்பிவிட்டால் அவதிக்கு உணர்வேது ஏசுவோர் இவரைப்பற்றி என்னென்ன சொன்னாலும் பேசுவோர் தவறாக-பிரிக்க பெருங்குறையைச் சொன்னாலும் ஈசனே எதிரில் வந்து இல்லாததைச் சொல்லி இருவரையும் பிரித்தாலும் இயலாமல் போய்விடுமாம் உறவென்றே இருப்பார்கள் உருகியுருகியே சிரிப்பார்கள் பெருமையாக நட்புகொண்டு பேரின்பம டைவார்கள் துன்பமே வந்தாலும் தோள்கொடுத் திருப்பார்கள் துடிப்போடு  எப்போதும்-அன்பு துணையாக இருப்பார்கள்

ரசித்தவர்கள்