Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கலர்க்கலராய் ஆடைப் பார்த்து

மேனியெல்லாம் நகையைப் பூட்டி மேல்சாதி என்று சொல்லுவான் மீதுமுள்ள உடல் இடங்களுக்கு மேலும் சாந்தும் பூசுவான் கீழ்த்தட்டில் வாழும்  மக்களையே கீழ்த்தரமாய் பார்த்து எண்ணுவான் கீழிருந்து மேல்வரைப் உற்றுக் கெட்ட வார்த்தைக் கூறுவான் கலர்க்கலராய் ஆடைப் பார்த்து கண் சிவந்து கொள்ளுவான் கண்டபடி மனதில் எண்ணி கஷ்டகாலமென்று  சொல்லுவான் நாட்டுக்கு உழைக்கச் சொல்லி நடித்தும்  நாடக மாடுவான் நாறிப் போன மானத்துக்கு நன்கொடைகள் பல செய்யுவான் கோடிகோடிப் பணத்தை சேர்த்து காவல் காத்து நில்லுவான் கஷ்டப்படும் ஏழைக்கு காசை வட்டிபோட்டு வாங்குவான் கண்டபடி மாத்திரையை மூன்று வேலை தின்னுவான் கடைசியிலும் உடலை வருத்தி கஷ்டமாக உயிரை நீக்குவான்

அவளின்றி எனக்கே மகிழ்வேது

அன்பானவள் எனக்கே அழகானவள் அனைத்திலும் என்னை அறிந்தவள் பண்பும் தெரிந்தவள் பாசக்காரி பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி எப்போதும் என்னையே சார்ந்தவள் எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள் முன்கோபம் வந்தால் பத்ரகாளி முடியாத நேரத்தில் பங்காளி முன்பொழுதில்  தினம் எழுவாள் மூன்று வேலையும்  சமைப்பாள் முகம் மலர்ந்தே உணவை முன்னே வந்து பகிர்வாள் கட்டளைப் போடும் எசமானி கஷ்டம் வந்தால் உபதேசி சித்திரை வெயிலாய் சிலநேரம் சிடுசிடு வென்றே தகதகப்பாள் ஆனாலும் எப்போதும் அன்பானவள் அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள் அவளன்றி வாழ்வே இருக்காது அருகின்றி எனக்கே மகிழ்வேது

அதிகாலைச் சூரியனே..

Image
அதிகாலைச் சூரியனே அன்பான வரவேற்பு ஆண்டவனைத் தரிசிக்க ஆர்வமுடன் வருகிறாயோ இன்முகத்தில் நீ வந்து இன்னல் தீர வேண்டுகிறாய் ஈசனையும் பார்த்துவிட்டு ஈகையோடு வாழ்த்துகிறாய் என்ன தேடி வருகின்றாய் எதற்காக  நீ கோபமுற்றாய் ஏனிந்த தீக் கனலை ஏற்றிவிட்டு தாக்குகிறாய் ஐயமில்லை உன் கோபம் ஐவருள் நீ அடக்கம்தானே ஒற்றுமையாய்  பஞ்சபூதம் ஒன்றி நன்மை செய்தாலே ஓங்கி வரும் நல்லொழுக்கம் ஒவ்வொருவரும் பேணுவார்கள் அஃதே எல்லோருக்கும் நலமாம்

மகிழ்வான தருணங்கள் --பதிவர்கள் சந்திப்பு

Image
     இன்று 05.06.2013  மாலை 5.00 மணிக்கு புலவர் ஐயாவையும் மற்றும் பிற நண்பர்களையும் காண வந்திருந்த அருமைச் சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்கள் புலவரைய்யா வீட்டிற்க்கு வந்திருந்தார்.அய்யாவின் அவர்களின் விருப்பப்படி நாங்கள் அய்யா வீட்டிற்கு சென்றிருந்தோம். எல்லோரையும் அய்யாவின் இளையமகள் சித்ரா அவர்கள் உபசரித்து வரவேற்றார். அதன்பின் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உரையாடி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் படத்தில் முதலில் நான். புலவர்.ரமாநுசம் அய்யா.பாலகணேஷ்,மதுமதி.இபான்.சசிகலா சங்கர் மஞ்சுபாஷினி நான்(கவியாழி),(மின்னல் வரிகள் )பாலகணேஷ்,புலவர் அய்யா, (தென்றல் )சசிகலா,(கதம்ப உணர்வுகள்.)மஞ்சுபாஷினி,மதுமதி புலவர் அய்யாவுடன் சசிகலாவும்,மஞ்சுபாஷினியும் மகிழ்ச்சியுடன். தனியாக எடுத்துக் கொண்ட  புகைப்படம்.   ஏறக்குறைய இரண்டு மணி நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்துச் சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்தது நிச்சயம் எல்லோருக்கும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியாய் இருந்தது. மறக்க முடியாத நிமிடங்கள் மகிழ்ச்சியான தருணங்கள்

ஆனந்த வாழ்வை பிரியோம்

உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் உருமாறும் காலங்கள் நேரங்கள் உண்மையை புரிந்ததா மனிதம் உலகமே அறியாத புதிராம் பொய்த்துப் போன இயற்கை புரியாத காலநிலை மாற்றம் சொல்லிலே பேசும் செயற்கை சோகமாய் மாறிவிட்ட நேர்மை வெல்லுவோர் வீழ்த்து தோற்றவர் சொல்லிலே விஷத்தை சேர்த்தவர் நல்லதை நாளும் செய்பவர் நாணயமே இல்லாத மனிதர் வாழ்கையில் ஏமாற்றம் வரும் வந்தபின் பணிந்து செல்லும் வசந்தமும் வந்து வாழ்த்தும் வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும் இன்னும் உள்ளது மனிதம் எப்படியும் மாறிவிடும் உலகம் அப்படியே சுழற்சி நின்றிடாது ஆழ்கடலும் வற்றிடாது அறியோம் அன்பினை யாருமே மறுத்து அறமே செய்வாரே பொறுத்து நீதியும் நேர்மையும் செயிக்கும் நித்தமும் மகிழ்ச்சியே பெருகும் ஆனாலும் எல்லோரும் மகிழ்வோம் ஆனந்த வாழ்வை பிரியோம் இருக்கும் வரையே நமது இறந்த பின்பு யாரறிவார்

ரசித்தவர்கள்