Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

முகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து

தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக்  கொள்பவன் புத்திசாலியில்லை தானென்ற அகம்பாவ ம் தவிக்க விடும் . தறுதலையாய் மாற்றிவிடும நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய்  -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் இறந்தபின்பு மறுபிறவியில் மனிதன்   சாதியில் சேர்க்கப் படுகிறான்? தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும் நமக்கெங்கே போச்சு மனித நேயம் ? தமிழ்இன உணர்வு? உன் வாழ்க்கை  உன் வசந்தம்   உன் விருப்பம்  வாழ்ந்துவிடு வாழ்க்கையை ! விருப்பமானவர்களாய்  தினமும் காதலியுங்கள்  அதற்கொரு தினம் வேண்டாமே ஈர்ப்பு என்பது  இயல்பாக வந்தால்  தோற்பதில்லை  துணையாகவே நிற்கும் தேடினால்தான்  தெளிவு கிடைக்கும் ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும் தேடுங்கள் ஓடுங்கள்  வெற்றியும் கிடைக்கும் ----கவியாழி----

"முயன்றால் முடியும்"

        வழக்கத்தில்  " முயன்றால் முடியும்" , "முயற்ச்சித் திருவினையாகும் ", "முயற்சியில்லாதார் தோல்வி அடைவார்கள் ", "முயற்சி இல்லாதார் இகழ்ச்சி அடைவர்" இப்படி பல பொன்மொழிகளையும் பழமொழிகளையும் நாம் அறிந்தே கேட்டுவருகிறோம் சொல்லிவருகிறோம். உண்மை என்ன?             அதற்காக என்னென்ன திட்டமிடல் செய்து வருகிறோமா இல்லையே அதையும் முயற்சிச் செய்யவேண்டும் என்றே ஒவ்வொருமுறையும் காலம் கடத்தி வருகிறோம்.இதனால் யாருக்கு என்ன பயன்  என்பதை அறியாமலே சிலநேரங்களில் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வதாய்  அமைந்துவிடுகிறது.  ஆனால் முயன்றால்  மனதும்  நம்மை அவ்வாறு  ஏமாற்றுவதில்லை         இதற்குத் தீர்வென்ன எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்ற வரைமுறையை நாம் தீர்மானிதாலோலிய எந்த விஷயத்திலும்  வெற்றி என்பது எளிதில்  கிடைக்காது.வரைமுறையை வரையறுக்க  வேண்டும் . தெளிவான தீர்க்கமான திட்டமிடல் வேண்டும்.அதற்காக மட்டுமே உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும்.         எல்லா வெற்றித் தோல்விக்குமே  காரணம் மனம்சார்ந்த  உணர்ந்த விஷயம்தான்.மனதில் உறுதியும் அழுத்தமும்  இல்லாவிட்டால் அச்செயலை

பதிவர்கள் கூட்டம்

Image
                                 நான் சுய அறிமுகம் செய்யும்போது                                        நண்பர்களுடன் நான்(நன்றி வெங்கட்) ஆர்வமாய் வந்தார்கள்  அனைவரும் ஆங்காங்கே பேசினார்கள் மகிழ்ந்தார்கள் ஆனந்தமாய் சிரித்தார்கள்  இணைந்தார்கள் அன்பாய் எல்லோரும் இருந்தார்கள் இன்பமே முகத்தில் தெரிந்தது இளமையாய் இருந்தது மகிழ்ந்தது துன்பமும் மறந்தது நட்பால் தூரமாய் அன்றுமே விலகியது பண்பால் சிறந்த படைப்பாளிகள் பசியைத் துறந்த உழைப்பாளிகள் நல்லதே சொல்லும் நல்லோர்கள் நட்பையே போற்றும் நல்பதிவர்கள் இளமை மறந்த பெரியோர்கள் இன்பமும் வெறுக்காத  இளைஞர்கள் இன்னுமே மணமாக பையங்கள் இனிமேல் தேடப்போகும் அவர்களும் சுதந்திரம் கொண்டே மகிழ்ந்தார்கள் சூழ்ந்தே பேசிச் சிரித்தார்கள் சொந்தம் கொண்டு அழைத்தார்கள் சொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள் ---கவியாழி---

என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்

Image
ஆர்வத்துடன்  அனைவரும்  புலவர் அய்யாவுடன் பதிவர்களும் நானும் எனது சுய அறிமுகத்தின் பொது

பதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்

பதிவர்கள் எழுச்சியைக் கண்டேன் பறந்து வருவதை அறிந்தேன் உறவை வளர்க்க துணிந்தேன் உங்களை வரவேற்று மனம் கனிந்தேன் சொல்லிப் புகழ விழைந்தேன் சொல்லில் தடுமாறி நின்றேன் மெல்லியச் சிரிப்பினை உதிர்த்தேன் மீண்டும் மீண்டுமே சிரித்தேன் நட்பில் நானும் மிதந்தேன் நாளும் அன்பில் நெகிழ்ந்தேன் பேச வேண்டித் துடித்தேன் பேசியப் பின்பு நினைத்தேன் வீரம் கண்டு சிலிர்த்தேன் தூரம் கேட்டுத் தொடர்ந்தேன் தொலைவில் இருப்பதை அறிந்தேன் தூய நட்பால் தொடர்ந்தேன் நேரில் காண இருந்தேன் நேரமின்றி நான் தவித்தேன் தமிழைத் தேனாய் குடித்தேன் தாகம் தீர்ந்து முடித்தேன்

ரசித்தவர்கள்